மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நாட்டில் தீவிரவாதத்தை வளர்த்து பாதுகாத்தாரா என்பது தொடர்பான விவரங்களை அறிய சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி ஆளுநர் பதவியில் இருந்தவேளையில் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும் அது தொடர்பான பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் எவ்வாறு பாடுபட்டார் என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பாக
சிஐடி மற்றும் டிஐடி இணைந்து சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மாவனெல்லயில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரம் மற்றும் வணாத்தவில்ல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பாதுகாத்த குற்றச்சாட்டில் முன்னாள் ஆளுநருக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,முஸ்லிம் பள்ளிகள்,உள்ளூர் மதரஸாக்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரப்புவதற்கு உதவியது என்ற குற்றச்சாட்டின் பேரிலும் அசாத் சாலி விசாரிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.