
‘ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசியின் அடுத்த தொகுதி ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நாட்டை வந்து சேரும் என கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
அத்தோடு ரஷ்யாவின் “ஸ்பூட்னிக் -வி” தடுப்பூசியையும் குறித்த காலப்பகுதியில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக “அஸ்ட்ராசெனிகா” தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் நிலவுவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக மாற்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டார்.