January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விகாரைக்கு பிக்குபோன்று வேடம் தரித்து வந்த நபரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

மீகலேவவில் உள்ள ரஸ்வேர ரஜமஹா விஹாரைக்கு நேற்று (16) பிற்பகல் வேளை சந்தேகத்திற்கிடமான முறையில் சமூகமளித்த நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

பௌத்த பிக்கு போன்று உடை அணிந்து வந்திருந்த குறித்த நபரை, விகாரையின் பிரதம பிக்கு விசாரித்தபோது, அவர் அருகில் உள்ள ஒரு விகாரையின் பிக்கு என தம்மை அடையாளப்படுத்தியுள்ளார்.

எனினும் அவரிடம் மேலதிக தகவல்களைக் கோரியதையடுத்து குறித்த நபர், அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தப்பி ஓடி மறைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து கிராம வாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த நபரை தேடி வருகின்றனர்.

இதுவரை குறித்த நபர் கண்டுபிடிக்கப்படாததையடுத்து பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குற்றச்செயலில் ஈடுபடுவதற்காக குறித்த நபர் விகாரைக்கு வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.