
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ, தனது பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அரசாங்கத்தின் முறைகேடுகள் தொடர்பாக கருத்து வெளியிட்டதால், ஜனாதிபதி தன்மை அச்சுறுத்தியதாகவும் விஜயதாச எம்.பி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசி உரையாடலில் பயன்படுத்திய தொனி, தனக்கும் குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது பாதுகாப்பை அதிகரிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.