அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.28 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததுடன், வரலாற்றில் முதற்தடவையாக நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 204 ரூபாவை கடந்திருந்திருந்தது.
இதன்படி நேற்றைய தினத்தில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 204.68 ரூபாவாக காணப்பட்டடது.
எனினும் மீண்டும் இன்றைய தினத்தில் டொலரின் விற்பனை விலை குறைவடைந்து ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.