தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகள் தொடர்பாக பிரச்சனைகள் காணப்படும் அரசியல் கட்சிகள் சிலவற்றின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறாக ஆறு கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த கட்சிகளின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு சிலர் உரிமை கோரியுள்ளதால், அது தொடர்பில் ஏற்பட்டுள்ள சட்ட ரீதியான பிரச்சினைகள் காரணமாக இதனை தீர்க்க கட்சியினர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த தீர்மானம் காரணமாக குறித்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த கட்சிகள் தொடர்பான வழக்குகள் முடிவடையும் வரையில் சம்பந்தப்பட்ட கட்சிகளை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கட்சிகளின் பெயர்களை வெளியிட முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.