பாக்கு நீரிணையை நீந்தி கடந்த, இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட வீரர் ரொஷான் அபேசுந்தர, கோப்ரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார் என இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர கடந்த 11ஆம் திகதி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனையை நிலைநாட்டியிருந்தார்.
தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி நோக்கி பாக்குநீரிணை ஊடாக நீந்திச் சென்ற அவர், அங்கிருந்து மீண்டும் இலங்கை திரும்பியிருந்தார்.
இதற்காக அவர், 28 மணித்தியாலங்கள், 19 நிமிடங்கள், 43 செக்கன்களை எடுத்துக் கொண்டதன் மூலம், புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டியிருந்தார்.
குறித்த சாதனையை பாராட்டும் வகையில், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவினால், சிரேஷ்ட விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர கோப்ரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.