
நாட்டை சீனாவின் காலனித்துவத்தின் கீழ் கொண்டுவருவதற்காக இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவரவில்லை என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்ட அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்க முனையும் போது நாங்கள் அதனைத் தடுத்து நிறுத்தினோம்.
அத்தோடு இந்த அரசாங்கத்தின் வெற்றிக்காக நாங்கள் மிகவும் பாடுபட்டோம். நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதற்காக அவர்களை ஆட்சிக்கு கொண்டுவரவில்லை.
நாட்டின் ஒற்றுமையையும் தனித்துவத்தையும் பாதுகாப்பதற்காகவே அவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்.
கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் சீன கிராமத்தை உருவாக்குவதை நாங்கள் எதிர்க்கின்றோம்.
நாட்டை விற்பதற்கோ குத்தகைக்கு கொடுப்பதற்கோ அல்லது நாட்டுக்கு பொருத்தமற்ற கொள்கைகளை உருவாக்குவதற்கோ மக்கள் இந்த அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கவில்லை.
ஆட்சியில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டங்களை முன்வைத்து நாட்டை நாசமாக்க முனைந்தால், இந்த ஆட்சியாளர்களை வெற்றியடைய செய்ததை போன்றே அவர்களின் திட்டங்களை தோற்கடிக்கவும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.