இலங்கையின் மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறாக மண்சரி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று தேசிய கட்டட ஆராய்ச்சி மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடும் இடி மின்னலுடன் கூடிய மழைப் பெய்யக் கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று பிற்பகல் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.