July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நோன்பாளிகளுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும்”; செஹான் சேமசிங்க

ரமழான் நோன்பாளிகளுக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனை பெற்றுக் கொள்வதற்கு இறுதி திகதி, இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிராம சேவையாளர் பிரிவுகள் மட்டத்தில் இனங்காணப்பட்ட குடும்பங்களுக்காக 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டத்தை பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணியும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து அமுல்படுத்துகின்றது.

சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், வயோதிபர்கள், விசேட தேவையுடையவர்கள், சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவை பெறுபவர்கள், 100 வயதை எட்டியுள்ள வயோதிபர்களுக்கான கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்காக இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

புத்தாண்டிற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்க முயற்சிக்கப்பட்ட போதிலும் முடியாமல் போயுள்ளது. இதனால் பணம் கிடைக்காதவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளர்கள் 18 இலட்சம் பேருக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தக் கொடுப்பனவை பெற தகுதியானவர்கள் இன்று (வியாழக்கிழமை )முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.