கொழும்பு மற்றும் கொழும்பின் புற நகர் பகுதிகளில் இயங்கும் தனியார் பஸ் வண்டிகளின் 80 வீதமான சாரதியினர் போதைப்பொருள் பாவனையுடன் பணியில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் போதைப்பொருள் பாவனையுடன் சேவையில் ஈடுபட்ட பஸ் சாரதிகள் கண்டறியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
போக்குவரத்து சேவையில் உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் போது, போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு முன்னரும் வழங்கப்பட்டு ஒரு மாதத்தின் பின்னரும் போதைப்பொருள் பரிசோதனைகள் மேற்கொள்வதை அமைச்சரவையில் முன்மொழியவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையுள்ளவர்களுக்கு வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதை நிராகரிக்கவுள்ளதாகவும் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.