November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2021 இல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் பதிவு; மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு

2021 இன் முதல் மூன்று மாதங்களுக்குள் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி. ஜனவரியில் 3350 வாகனங்களும், பெப்ரவரியில் 3661 வாகனங்களும், 2021 மார்ச் மாதத்தில் 3650 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வற்றில் மோட்டார் சைக்கிள் தான் (3525) அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 1756 டிராக்டர்கள், 1309 மோட்டார் கார்கள், 1534 CAB, VAN உள்ளிட்ட  வாகனங்கள் மற்றும் 42 முச்சக்கர வண்டிகளும் அடங்கும்.

அதேநேரம், இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 196,937 வாகன உரிமையாளர் இடமாற்றங்கள் நடந்ததாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இதில் 2021 ஜனவரியில் 49,629 உரிமையாளர் இடமாற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், பெப்ரவரி மாதத்தில் 63,523 இடமாற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், மார்ச் மாதத்தில் 83,785 இடமாற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இடமாற்றங்கள் முச்சக்கர வண்டிகள் (54,884) என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 53,978 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 44,980 மோட்டார் கார்களின் இடமாற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.