
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2 ஆம் – 3 ஆம் வருட மாணவர்களுக்கிடையில் இன்று மாலை முறுகல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்தை நாடி பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முயன்றபோது ,காவலாளியும் விரிவுரையாளர்கள் சிலரும் இணைந்து தம்மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் பல்கலைகழக வாயிலில் போராட்டம் நடத்திய மாணவர்கள், தங்களை தாக்குவதற்கான உரிமையை யார் கொடுத்தது? மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக நாளை பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் மூலம் விசாரணை நடாத்துவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா உறுதியளித்ததன் பிரகாரம் மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.