தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பெருமளவான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருவதாக நுவரெலியா மாநகர சபையின் மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்
கடந்த காலங்களை விடவும் இம்முறை அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும், இதனால் நகரிலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளதாக நுவரெலியா மாநகர சபையின் மேயர் குறிப்பிட்டடுள்ளார்.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் நுவரெலியாவில் வசந்தகால நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறையுடன் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவில் புத்தாண்டை கொண்டாடுவற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகர மேயர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இம்முறை நுவரெலியாவில் இசை நிகழ்ச்சிகள் உட்பட சில நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.