January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவாவில் பங்களாதேஷ் எடுத்த முடிவு இருதரப்பு உறவின் சிறப்பை காட்டுகிறது; ஜி.எல். பீரிஸ்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக பங்களாதேஷுக்கு நன்றி தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்,பங்களாதேஷின் இந்த நிலைப்பாடு நாடுகளுக்கு இடையிலான சிறந்த இருதரப்பு உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அன்னையர் மொழி தினத்தை நினைவுகூரும் வகையில் கல்வி அமைச்சும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயமும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேற்கத்தைய சக்திகளால் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த 11 நாடுகளில் பங்களாதேஷும் இருந்தது என்று தெரிவித்த அவர்,இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் உறவை வலியுறுத்திய அதேவேளை,இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்ததற்காக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.