January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எம்.ஏ. பட்டதாரியான வெலிக்கடை சிறைக் கைதிக்கு குவியும் பாராட்டுக்கள்

வெலிக்கடை சிறைச்சாலையில் மிக நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள சந்தன குருசிங்ஹ என்ற கைதி பட்டதாரியாக பரிணமித்துள்ளார்.

சிறையில் இருந்து கொண்டு பட்டப்படிப்பு கல்வியை முன்னெடுத்து சமூக விஞ்ஞான முதுகலை பட்டம் பெற்ற இரண்டாவது கைதி என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலையின் நிர்வாக மற்றும் மறுவாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், சந்தன குருசிங்ஹ மாஸ்டர் ஒஃப் தத்துவ பட்டத்தைப் பெறுவதற்காக களனி பல்கலைக்கழகத்தில் தனது பெயரை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து சந்தன ஏக்கநாயக்க கருத்து தெரிவிக்கையில், முதுகலை பட்டம் பெற்ற சந்தன குருசிங்க என்ற கைதி சிறையில் படித்து வருகிறார். மேலும் பௌத்த தர்ம பரீட்சையிலும் அதிக புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இதில் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் முன்னதாக வெளியிடப்பட்ட சபிரி கெய பாமுல என்ற கவிதை நூலின் ஆசிரியராகவும் அவர் செயற்பட்டுள்ளார் என வெலிக்கடை சிறைச்சாலையின் நிர்வாக மற்றும் மறுவாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, ‘சந்த கிந்துரா ஹிர கெதர’ என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, மொஹமட் சியாம் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலையின் முன்னாள் உப பொலிஸ் ஆய்வாளர் இந்திக பமுனுசிங்க இதே போன்ற துறையில் முதுகலை பட்டம் பெற்ற முதல் கைதி என்பது குறிப்பிடத்தக்கது.