July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 5 ஆண்டுகளில் சுமார் 47 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் மீட்பு

இலங்கையில் கடந்த 5 ஆண்டுகளில் 46 ஆயிரத்து 824 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் ஒரு கோடியே 86 இலட்சம் போதை வில்லைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இதனிடையே, போதைப் பொருள் குற்றச்சாட்டுகளுடன் 4 இலட்சத்து 70 ஆயிரத்து 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டுடன் தொடர்புடைய கைதுகள் மற்றும் சுற்றிவளைப்புகள் பற்றி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அமைச்சர் சமல் ராஜபக்ஷ இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

2015 ஆம் ஆண்டு முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் பொலிஸார், சுங்கத் திணைக்களத்தினர், முப்படையினர் மற்றும் சிறைச்சாலைகள் அதிகாரிகளால் பல்வேறுபட்ட சட்ட விரோத போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளை முடக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும், கடல் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.