இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த எட்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம மற்றும் தொடங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு இடையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிகமான மக்கள் சுற்றுலா பயணங்களில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவத்தால் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக மாத்தறை நோக்கிய பயணம் தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், வாகன சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களின் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக 135 மில்லியனுக்கு அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Video – Several vehicles reportedly collide along Southern Expressway.
Lot of #Avurudu Trips, Outings & Pilgrimages.
DRIVE 🚗, RIDE 🏍️ & Cross 🚶SAFE
Dont Drink and Drive!#AvuruduSL #LKA #SriLanka
Video via – Social Media pic.twitter.com/tcLEujrwTL— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) April 14, 2021