July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசனப் பட்டியை அணியுமாறு கூறிய பொலிஸ் அதிகாரியை தாக்கிய சாரதி கைது

அதிகவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹா ஹெதக்மா நுழைவாயிலில் கடமையில் இருந்த  பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய வான் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சாரதி நேற்று மாலை (13) கொழும்பு –  குருந்துகஹா ஹெதக்மா நுழைவாயிலில் வைத்து,ஆசனப்பட்டி அணியாமல் நுழைய முயன்றுள்ளார்.

இதன்போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி குறித்த சாரதியை தெளிவுபடுத்த முற்பட்ட வேளையில் ஏற்பட்ட வாய்த்தகராறினால் பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்படி, பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய குறித்த சாரதி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற வகையில் மோட்டார் வாகனத்தை செலுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதிவேக வீதியின் பாதுகாப்பு பிரிவினரால் குறித்த நபர்  கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவர் அக்குறணை பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் பாணந்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.