July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 11 ‘கடும்போக்கு இஸ்லாமியவாத’ அமைப்புகளை தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

இலங்கையில் 11 ‘கடும்போக்கு இஸ்லாமியவாத’ அமைப்புகளை தடை செய்து, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு தலைமைத்துவம் வழங்குவது, உறுப்பினராக இருப்பது, அமைப்புடன் தொடர்புடைய உடை- சின்னங்களை அணிவது, கூட்டங்களை நடத்துவது, ஊக்குவிப்பது, தகவல்களை வெளியிடுவது போன்ற நடவடிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்வரும் இஸ்லாமிய அமைப்புகளே இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன.

1. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்
2. சிலோன் தௌஹீத் இமாஅத்
3. ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்
4. அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்
5. ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹம்மதியா
6. தாருல் அதர் அல்லது ஜாமிஉல் அதர்
7. ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்
8. ஐஎஸ்ஐஎஸ்
9. அல்கைதா
10. சேவ் த பேர்ல்ஸ்
11. சுபர் முஸ்லிம்