January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்த வருடத்துக்குள் மாகாணசபை தேர்தல்கள் சாத்தியமில்லை’

நீண்ட காலமாக இழுபறியிலுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டுக்குள் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் இல்லை என தெரியவருகிறது.

தி மோர்னிங் இணையத்துக்கு வழங்கிய நேர்காணலொன்றில் பேசிய இணை அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில, 1988 ஆம் ஆண்டின் எண் 2 மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் இதுவரை திருத்தம் மேற்கொள்ளப்படாததால், மாகாண சபை தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடைபெற வாய்ப்பில்லை என்றும்,பெரும்பாலும் 2022 இல் நடைபெறும் வாய்ப்புகளே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,விரைவில் இந்த விவகாரம் சம்பந்தமாக ஒரு இறுதி முடிவை எட்டுவோம் என்று நம்புகிறோம் என்றும் ஏப்ரல் 19 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர மாகாண சபை தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,பெரும்பாலும் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.