‘எந்தவொரு காரணத்துக்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லராக மாறுவார் என்று தான் நம்பவில்லை’ என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
‘ஹிட்லரைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு’ என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
“இதுபோன்ற கருத்துக்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.பௌத்த மதமானது தயவை அடிப்படையாகக் கொண்டது.அந்த அடிப்படையில் ஹிட்லரைப் போல் இருக்குமாறு யாராவது ஜனாதிபதியிடம் சொன்னால்,பொதுமக்கள் அதற்கு தகுந்த பதிலளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.அது போன்ற ஒரு விடயம் விரைவில் நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.