February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வளமான நாட்டை நோக்கிய புதிய பாதையில் பயணிப்போம்”: ஜனாதிபதி, பிரதமர் புத்தாண்டு வாழ்த்து

அனைத்து மக்களும் எவ்விதமான பேதங்களும் இன்றி அமைதியானதும், நேர்மையானதுமான எண்ணங்களுடன் தமிழ், சிங்கள புத்தாண்டு சம்பிரதாயங்களில் இணைந்துகொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள் புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய எதிர்பார்ப்புகளுடன் புத்தாண்டை வரவேற்கும் நாம், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்தும், சுகாதார ஆலோசனைகளை பின்பற்றியும் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, மலரும் புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைய வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் வாழ்த்து

மக்கள் மீது சுமத்தப்படும் சுமையை அரசாங்கம் பொறுப்பேற்று, அனைத்து மக்களின் எதிர்காலத்தையும் வளமாக்க அரசாங்கம் செயல்படுகின்றது என்பதை இந்தப் புத்தாண்டியில் நினைவூட்டுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

புதிய சிந்தனைகள் மற்றும் அபிலாஷைகளுடன் நாம் எதிர்கொள்ளும் சவால்களை கவனத்திற்கொண்டு, ஒரு வளமான நாட்டை நோக்கிய ஒரு புதிய பாதையில் பயணிக்க வேண்டிய நேரம் எழுந்துள்ளது என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அதற்காக நம் ஒருவருக்கொருவர் இடையில் காணப்படும் உறவை வலுப்படுத்தி, இலங்கை தேசம் என்ற ரீதியில் உலகின் முன்னிலையில் புதிய வீரியத்துடன் உயர்ந்து நிற்பதற்கு இப்புத்தாண்டில் நாம் உறுதி கொள்வோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.