January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இளவரசர் பிலிப் மரணத்துக்கு இலங்கையின் இரங்கல் செய்தியைப் பதிவுசெய்தார் வெளியுறவு அமைச்சர்

பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணத்தை முன்னிட்டு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன கொழும்பில் உள்ள ‘வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில்’ வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக வெளியுறவு அமைச்சர் இந்த இரங்கல் செய்தியைப் பதிவுசெய்துள்ளார்.

வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் வரவேற்பு வழங்கியுள்ளார்.

இதன்போது, இலங்கை மக்கள் சார்பாக ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திய வெளியுறவு அமைச்சருக்கு பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நன்றி தெரிவித்துள்ளார்.