May 29, 2025 13:48:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் செயற்பாட்டாளர் அசேல சம்பத் கைது!

மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் செயற்பாட்டாளர் அசேல சம்பத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிபிட்டிய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொம்பனித் தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளின் கடமைகளுக்கு தொந்தரவு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற மேற்படி சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாத காரணத்தினால், அசேல சம்பத் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில் விநியோகிக்கப்பட்ட சதொச நிவாரண பொதி தொடர்பில் போலி தகவல்களைப் பரப்பியதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இவருக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.