January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சித்திரைப் புத்தாண்டு வியாபாரம்: சோபையிழந்து காணப்படும் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் சோபையிழந்து காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனாதொற்றுப் பரவல் காரணமாக யாழ். மாநாகரில் புடவைக் கடைகள் உள்ளிட்ட வர்தக நிலையங்கள் இரண்டு வாரங்களாக மூடபட்டிருந்ததுடன், வர்த்தக நடவடிக்கைகளுக்காக கடந்த வாரம் முதல் அவை மீளத் திறக்கப்பட்டன.

எனினும் கொரோனா தொற்றால் வர்த்தகர்களும், ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் சில வர்த்தக நிலையங்கள் மீண்டும் மூடப்பட்டன.

இந்நிலையில் யாழில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் சோபையிழந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை யாழில் நடைபாதை வியாபாரம் ஏராளமாக இடம்பெறுகின்றமையினால் மக்கள் வர்த்தக நிலையத்திற்கு வருவது குறைவடைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

This slideshow requires JavaScript.