இலங்கையில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாட்டை நிவர்த்திச் செய்ய 39,000 டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் புற்று நோயை ஏற்படுத்தும் இரசாயன கலப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாம் எண்ணெய் இறக்குமதியை இடை நிறுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கான கேள்வி அதிகரித்ததுடன், அதன் விலை முன்னைய விலையை விடவும் இருமடங்கால் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்தி தேங்காய் எண்ணெய்க்கான உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வர்த்தக அமைச்சு, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றை 450 ரூபாவிற்குவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனபோதும் நாட்டில் தேங்காய் எண்ணெய்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்பதனால் 39,000 டொன் உலர்ந்த தேங்காய் துண்டுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.