திருடப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பல, இலங்கையில் இணையத்தளங்களின் ஊடாக விற்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால் இணையத்தளங்கள் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பெறுமதியான மொபைல் போன்கள், நகைகள், வாசனைத் திரவியங்கள், கண்ணாடி பொருட்கள் போன்றவை இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற இணையத்தளங்கள் ஊடாக பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் சிசிடிவி கமராக்கள் இல்லாத இடங்களைத் தேர்ந்தெடுத்து பொருட்களைப் பதிவு செய்தவர்களுக்கு வழங்கிவிட்டுத் தப்பிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பண்டிகை காலத்தை இலக்கு வைத்துப் பல விதமான திருட்டு சம்பவங்கள் பதிவாகிவரும் நிலையில் பொதுமக்கள் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.