கொரோனா தொற்று அச்சம் காரணமாக மன்னார் ஆயர் இல்லத்திற்கான உட்செல்லும், வெளிச்செல்லும் அனுமதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆயர் இல்லத்தில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சுகாதார பாதுகாப்பு கருதி ஆயர் இல்லத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ பகுதியை சேர்ந்த குறித்த கட்டட நிர்மாணப் பணியாளர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த 7 ஆம் திகதி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த நபர்களையும் தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவர் நடமாடிய பகுதிகளில் தொற்று அபாயம் காணப்படுவதால், அந்த இடங்களை மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.