July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ரஞ்சன் ராமநாயக்கவுக்காக அரசியல் தீர்மானமொன்றை எடுப்பேன்’: ஹரின் பெர்னாண்டோ

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் பெரும் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மே மாதம் முதலாவது வார பாராளுமன்ற அமர்வில் அரசாங்கத்துக்கு சவாலொன்றை முன்வைக்கவுள்ளதாகவும், அரசாங்கத்தால் சவாலைப் பொறுப்பேற்க முடியுமா என்பதைப் பார்க்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் போலி முகங்களைக் கிழித்தெறிந்த ரஞ்சன் சிறைத் தண்டனை அனுபவிப்பதாகவும், கொலை செய்தவர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும் ஹரின் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவை மீட்டெடுக்க தனக்கு முதுகெலும்பு இல்லையென மாத்தறையில் இருந்து பாராளுமன்றம் வந்துள்ள ஒருவர் தெரிவித்ததாகவும், அரசாங்கம் சிறையில் அடைப்பவர்களை தான் எவ்வாறு காப்பாற்ற முடியும்? என்றும் ஹரின் கேள்வி எழுப்பியுள்ளார்.