இலங்கை முஸ்லிம்களுக்கு ஏப்ரல் 14 ஆம் திகதி புதன்கிழமையில் இருந்து ரமழான் மாத நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தலைமையில் நோன்பை ஆரம்பிப்பதற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதன்போது, இலங்கையின் எந்தவொரு பாகத்திலும் இஸ்லாமிய நாட்காட்டியின் ‘ரமழான்’ மாத தலைப்பிறை தென்படாததால், ஷாஃபான் மாதத்தை 30 நாட்களாகப் பூரணப்படுத்தி, 14 ஆம் திகதி புதன்கிழமையில் இருந்து நோன்பை ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் 5 கடமைகளில் ஒன்றான நோன்பை, முஸ்லிம்கள் இஸ்லாமிய நாட்காட்டியின் 9 ஆவது மாதமான ‘ரமழான்’ மாதத்தில் நோற்கின்றனர்.