April 30, 2025 11:28:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவுடன் 500 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம்  கைச்சாத்திட்டுள்ளது.

பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் வைத்து சீனாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித கொஹன குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, குறித்த நிதி இந்த வாரம் கிடைக்கப்பெறும் என நிதி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு குறித்த நிதி பங்களிப்பு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையின் ஒரு பகுதியாக குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே கடந்த ஆண்டு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்பட்டதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.