July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழ் மக்களுக்கு மனிதாபிமான ரீதியிலான பணிகளையே இராணுவம் முன்னெடுக்கின்றது”: இராணுவத் தளபதி

இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான ரீதியிலான பணிகளையே முன்னெடுக்கின்றது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆனால் வெளிநாட்டுத் தொடர்புகளை கொண்டுள்ள சிலரே இராணுவம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும், உண்மையில் இராணுவம் என்ன செய்கின்றது என்பதனை தமிழ் மக்கள் அறிவார்கள் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் போது, குடும்பத் தலைவனை இழந்த பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பமொன்றுக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ள வீடொன்றை இன்று திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருதது தெரிவிக்கையிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான இராணுவமே ஆகும், இதனை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இங்குள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி இராணுவத்தினர் தொடர்பாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர் என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள தான், தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், இதன்படி தொற்று நிலைமையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவத் தளபதி இதன்போது தெரிவித்துள்ளார்.