January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக வலைத்தளங்களில் போலிப் பிரசாரங்களை கட்டுப்படுத்த சட்டம்: இந்த வாரம் அமைச்சரவைக்கு வருகிறது

Social Media / Facebook Instagram Twitter Common Image

இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடான போலிப் பிரசாரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் தயாராகி வருகின்றது.

அதற்கமைய நீதி அமைச்சு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு இணைந்து சட்டக் கோவை ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக  கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூகங்களுக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்தும் மற்றும் வெறுப்புணர்வுகளை தூண்டும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்தல், இரு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள் மற்றும் நட்புறவு செயற்பாடுகள் குறித்து பொய்யான பிரசாரங்களை பரப்புதல், இனவாத, மதவாத கருத்துக்களை பரப்புதல், நிதி விடயங்களில் பொய்யான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட விடயங்களில் கட்டுபாடுகளை ஏற்படுத்தல் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.