உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாக உள்ள 80 அரசியல்வாதிகள் மீது இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் என ஆணைக்குழுவின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கல்வித்துறை தொடர்பில் அதிகளவு எண்ணிக்கையிலான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.