கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 925 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய நேற்று முற்பகல் 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்போது, நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 306 பேரும், ஊழல் மோசடி குற்றங்களுடன் தொடர்புடைய 518 சந்தேக நபர்களும், வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 101 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.