July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சதொச நிவாரணப் பொதியை அவமதித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’; பந்துல குணவர்தன

சதொச நிவாரணப் பொதி தொடர்பில் ஏற்பட்ட அவமதிப்பு காரணமாக சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்து 50 கோடி ரூபா இழப்பீடு கோரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

சதொச நிவாரணப் பொதி தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து பல பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது உண்மையில் அவமதிப்பாகும். இதனால் சதொச நிறுவனத்தின் தலைவர், அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர், தேயிலை இறக்குமதியாளர் சங்கம் ஆகியவற்றினால் அவர்களது வியாபார நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்திய தேசிய குற்றத்துக்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நபர்கள் யார் என்பதை இனங்காண்பதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், குறித்த நபர்களை கண்ட இடத்தில் கைது செய்வதற்கான நீதிமன்ற அனுமதியுடன் அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். அவ்வாறு கைது செய்த பிறகு ஊடகங்களில் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படும்.

இதனிடையே, சதொச நிவாரணப் பொதி தொடர்பில் எனக்கு ஏற்பட்ட அவமதிப்பு காரணமாக 50 கோடி ரூபா இழப்பீடு கோரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.