தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுபவர்கள் தொடர்பாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் சுகாதார ஒழுங்குவிதிகளை மீறுபவர்களை கண்டறிய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இன்னும் முற்றாக நீங்காத நிலையில், மக்கள் பொது இடங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் சுகாதார பாதுகாப்பை கடைபிடிக்காது நடந்துகொள்வதை அவதானிக்க முடிவதாகவும், இதன் காரணத்தால் அது குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.