January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டன!

கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளதுடன், விழாக்களை நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும் திரையரங்குகளை மூடவில்லை என்று எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதி இன்றைய தினத்தில் மீளத் திறக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்தையில் வழமையாக 300 ற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடும் நிலையில் இன்றைய தினத்தில் 55 வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.