January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண சபைத் தேர்தல்; 19 ஆம் திகதி இறுதி முடிவு என்கிறார் மஹிந்தானந்த

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை உத்வேகத்துடன் எதிர்கொள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராயிருக்கிறது. அத்துடன்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்காளி கட்சிகளும் பிரிந்து நின்று மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ளப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்,புதிய மாகாண சபை சட்டம் தொடர்பாக இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் ,கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.