இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிடஸ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
கொழும்பு வெளியுறவு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேநேரம், இலங்கை- அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மீதான ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இருவரும் சந்தித்துக்கொண்ட முதல் தடவை இதுவாகும்.
🇱🇰|🇺🇸 Foreign Minister Dinesh Gunawardena met with the US Ambassador Alaina B. Teplitz on 09 April 2021 and reviewed bilateral engagements with a view to further broadening and deepening #SriLanka – #US relations in multiple areas of cooperation.@DCRGunawardena @StateDept pic.twitter.com/9IkQzanRe8
— MFA SriLanka 🇱🇰 (@MFA_SriLanka) April 10, 2021