January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் 19 : இலங்கை தயாரித்துள்ள புதிய மருந்துகள்

கொவிட் -19 வைரஸால் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்காக இலங்கை சுதேச மருத்துவ அமைச்சினால் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சுதேச மருத்துவத்தை ஊக்குவித்தல், கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆயுர்வேத திணைக்களமும் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனமும் இணைந்து நோய் எதிர்ப்புப் பானத்தையும் மருந்துத் தூளையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்துகள் அனைத்தும் 100 சதவீத உள்ளூர் மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை என்றும் அவை ‘சதங்கா பனம்’ மற்றும் ‘சுவாதாரணி நோய்த்தடுப்பு பானம்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த மருந்துகள் ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.

தற்போதைய நிலைமையில் மேற்கத்தேய மருத்துவத்தால் இன்னும் கொவிட் 19 -க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருப்பினும், இந்த சவாலை சமாளிக்கக்கூடிய மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் எமது சுதேச மருத்துவ அமைச்சுக்கு உள்ளது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்துகள் நேற்று பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சரினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.