January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாடளாவிய ரீதியில் 1900 பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் களத்தில்’

இலங்கையில்,நாடளாவிய ரீதியில் 1900 பொது சுகாதார உத்தியோகத்தர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்டத்தின் சிரேஸ்ட அதிகாரியான ஏ.ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலங்களில் காலாவதியான பொருட்கள் மற்றும் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களின் விற்பனையைத் தடுக்கும் பணியில் நேற்று முதல் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காலாவதியான மற்றும் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.