February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண சபை தேர்தலில் தொகுதிக்கு 3 வேட்பாளர்கள்; ஆளும்தரப்பு பங்காளி கட்சிகள் நிராகரிக்க தீர்மானம்

மாகாண சபை தேர்தலில்கட்சியொன்றின் 3 வேட்பாளர்களை தொகுதிக்கு முன்னிறுத்தும் யோசனையை நிராகரிப்பதற்கு ஆளும் கட்சியின் சில பங்காளி கட்சிகள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் கலந்துரையாடலின் போதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்காரவும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், எமது மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, கெவிந்து குமாரதுங்க, டிரான் அலஸ், வீரசுமன வீரசிங்க, மற்றும் முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

எது எவ்வாறாயினும், ஏப்ரல் 19 ஆம் திகதி பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.