புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில் இந்து சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி, இலங்கையின் 12 மாவட்டங்களில் இன்று காலை முதல் மாலை வரை உணவுத் தவிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிவசேனை அமைப்பின் ஸ்தாபகர் மறவன்புலவு சச்சிதானந்தன் ஏற்பாட்டில் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இந்து சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால், மதம் மாற்றுபவர்கள் மூலம் சைவ சமயத்திலிருந்து வேறு மதத்திற்கு மக்கள் செல்லமாட்டார்கள் என்றும் பௌத்த மதமும் இந்து மதமும் பாதுகாக்கப்படும் எனவும் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், கிழக்கு இலங்கையில் மதமாற்ற செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றதுடன், இலங்கையில் மாடுகள் வெட்டுவதை நிறுத்த வேண்டுமெனவும் சச்சிதானந்தன் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.