May 24, 2025 13:23:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புத்தாண்டை முன்னிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு’: ஷெஹான் சேமசிங்க

புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கே இத்தொகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தாண்டு தினத்துக்கு முன்னர் இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு சுமுர்த்தி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.