
யாழ்ப்பாணத்தில் முடக்கப்பட்டிருந்த அனலைதீவு மற்றும் காரைநகர் பிரதேசங்கள் மீண்டும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அனலைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தால் அவர்கள் நடமாடிய பிரதேசங்கள் முடக்கப்பட்டிருந்தன.
ஆனால் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது.
இதனால் முடக்கப்பட்டிருந்த அனலைதீவு மற்றும் காரைநகர் பிரதேசங்களை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் க .மகேசன் தெரிவித்துள்ளார்.