May 23, 2025 14:32:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மொஹான் சமரநாயக்க நியமனம்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் இதற்கு முன்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானியாக பதவி வகித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக பதவி வகித்த நாலக கலுவெவ மார்ச் 23 ஆம் திகதி பதவி விலகினார்.

இதனை தொடர்ந்து இதுவரையில் பதில் பணிப்பாளராக ஊடகத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் பணியாற்றி வந்ததுடன், இன்றைய தினம் புதிய பணிப்பாளராக மொஹான் சமரநாயக்க நியமனம் பெற்றுள்ளார்.