January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரயில்வே ஊழியர்களின் திடீர் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம்!

ரயில் எஞ்சின் சாரதிகளும், கட்டுப்பாட்டாளர்களும் திடீர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

புகையிரத திணைக்களத்துக்கு உள்ளேயே புதிய பொது முகாமையாளர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத திணைக்களத்துக்கு வெளியிலேயே புதிய பொது முகாமையாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு கோட்டையில் இருந்து முன்னெடுக்கப்படும் அனைத்து புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

எனினும் சில மணி நேரத்தின் பின்னர், அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.