இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி விபத்துக்குள்ளான ‘எம்.டி நியூ டயமன்ட்’ எண்ணெய்க் கப்பல் நிறுவனத்திடமிருந்து 3.423 பில்லியன் ரூபா (19.022 மில்லியன் அமெரிக்க டொலர்) நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டுளள்ளது.
குறித்த ஆவணங்கள் கப்பல் நிறுவனத்தின் சட்டத்தரணிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் இருந்து இந்தியவுக்கு மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற குறித்தக் கப்பல் 2020 செப்டம்பர் 4 ஆம் திகதி, இலங்கையின் கிழக்குக் கடல் பகுதி ஊடாக பயணிக்கும் போது தீ விபத்துக்கு உள்ளாகியிருந்தது.
இதனை தொடர்ந்து இலங்கை மற்றும் இந்திய கடற்படையினரால் 5 நாட்களின் பின்னர் கப்பலின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கான செலவு மற்றும் தீயினால் இலங்கை கடலுக்கு ஏற்பட்டிருந்த மாசடைவு ஆகியவற்றுக்காக 340 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டுமென்று இலங்கையினால் அந்தக் கப்பல் நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி அது தொடர்பான ஆவணங்கள் தற்போது அந்த கப்பல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.